தமிழகத்தில் மதுபான கடைகள் தொடர்பாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் 100 மதுபான கடைகளை நவீனமயமாக்குவது மற்றும் மதுபான கடைகளில் விலை பட்டியல் உள்ளிட்ட வேலைப்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் உள்நாட்டு மதுவகை வியாபாரத்தை அதிகரிக்கும் வகையில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை 500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டு உள்ள நிலையில் பார்கள் மற்றும் கிளப்புகளில் வழங்கப்படும் மதுபானங்கள் விலையை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது . அதன்படி பெருமீட் ரூம் மதுபான சேவைக்கான வாட் வரி ஐந்து சதவீதம் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் ஆன் கவுன்டர் விற்பனையில் எந்த விலை மாற்றமும் இருக்காது என அரசு தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.