பெங்களூருவில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிஎம்டபிள்யூ காரின் கண்ணாடியை உடைத்து, 13.75 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றனர். சர்ஜாபூர் சோம்புராவில் உள்ள சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாகி, பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில், ஒருவர் மோட்டார் சைக்கிளில் காத்திருப்பதைக் காணலாம், மற்றொரு நபர் காரின் டிரைவரின் கண்ணாடியை உடைத்து பணத்தை எடுத்துச் செல்கிறார். இந்தச் சம்பவம் பட்டப்பகலில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தகட்டி கிராமத்தில் நிலத்தை பதிவு செய்வதற்காக நண்பரிடம் கடன் வாங்கிய ரூ.5 லட்சம் உள்ளிட்ட சேகரிக்கப்பட்ட பணத்தை எடுத்துக்கொண்டு மோகன் பாபு  மதியம் 1:30 மணியளவில் சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்திற்கு அருகில் உள்ள கிரியாஸ் கடையின் அருகே காரை நிறுத்திவிட்டு பின் உள்ளே சென்றுள்ளார். மதியம் 2:30 மணியளவில் திரும்பி வந்து பார்த்தபோது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு பணம் காணாமல் போனது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து சர்ஜாபுரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட வழக்கு பதிவு செய்த அதிகாரிகள்  குற்றவாளிகளை பிடிக்கவும், திருடப்பட்ட பணத்தை மீட்கவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.