கரூர் மாவட்டத்திலுள்ள ஐயம்பாளையம் ஆதிதிராவிடர் தெருவில் கூலி வேலை பார்க்கும் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அமலா என்ற மனைவி உள்ளார். கடந்த 11-ஆம் தேதி ராஜேந்திரனின் தாய் கன்னியம்மாள் உடல் நல குறைவால் உயிரிந்தார். இதனால் யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
அப்போது அமலா ஏன் வேலைக்கு செல்லவில்லை என தனது கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு ராஜேந்திரன் தான் 20 மாத்திரைகளை சாப்பிட்டு விட்டதாக கூறினார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அமலா தனது கணவரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராஜேந்திரன் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.