அமெரிக்க நாட்டில் இடாஹோ என்னும் பகுதியில் விக்டர் பாடசாலை அமைந்துள்ளது. இந்த பாடசாலைக்கு அருகே கரடி குட்டி ஒன்று இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். அப்போது ஒரு வயது நிரம்பிய கரடி குட்டி மரத்தின் மேலே ஏற முயன்று கொண்டிருந்தது. அதிக பனிப்பொழிவு மற்றும் கடுங்குளிர் காரணமாக கரடி குட்டியின் தாய் உயர்ந்திருக்கலாம் எனவும் கரடி குட்டி உணவு தேடி வேறு வழியில்லாமல் இங்கு வந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் வனத்துறையினர் கரடிகுட்டியை பிடிக்க மயக்க ஊசியை செலுத்தியுள்ளனர். ஏற்கனவே அந்த கரடி குட்டி உணவின்மையால் உடல் எடை குறைந்து பலவீனமாகவும் இருந்ததால் மயக்க ஊசியின் தன்மையை எதிர்கொள்ள முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது “கரடி குட்டிகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தால் அதிக சேட்டைகள் செய்வது வழக்கம். இது பொது மக்களுக்கு இடையூறாக அமைவதால் நாங்கள் உடனே அதனை அப்புறப்படுத்த எடுக்கும் முயற்சியில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்க நேரிடுகிறது” என்று கூறியுள்ளனர்.