சீன நாட்டில் ஜியான் ஜாங்ளி என்ற நபர் Remote kissing device என்ற சாதனத்தை வடிவமைத்துள்ளார். இந்த சாதனம் தொலைதூர காதலர்கள் தங்களது உண்மையான முத்தத்தை பரிமாறிக்கொள்ள பயன்படுமாம். இந்த கிஸ்ஸிங் சாதனத்தில் ஒரு ஜோடி சிலிக்கான் உதடுகள் கொடுக்கப்படும். அதில் உள்ள அழுத்தம், உணர்வுகள் ஆகியவை காதலனின் முத்தத்தின் அழுத்தம், இயக்கம் மற்றும் வெப்பநிலையை மீண்டும் உருவாக்க கூடியவையாம். இது தொடர்பாக ஜியான் சாங்கிலி கூறியதாவது “நானும் எனது காதலியும் தொலைதூரத்தில் இருந்தோம். எனவே நாங்கள் ஒருவரை ஒருவர் தொலைபேசி மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்தது.

அப்போதுதான் இந்த சாதனத்தை வடிவமைக்கும் உத்வேகம் எனக்கு உருவானது” என்று தெரிவித்துள்ளார். இதனைப் பயன்படுத்துவதற்கு இதற்கான ஆப்பை முதலில் உங்களுடைய தொலைபேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதனை அடுத்து சாதனத்தை உங்கள்தொலைபேசியுடன் ப்ளூடூத் மூலமாக இணைக்க வேண்டும். அதன்பின் இதில் உள்ள சிலிகான் உதடுகளில் முத்தமிட்டால் பிரஷர் சென்சார் மூலம் உண்மையான முத்தத்தை தங்களுடைய இணையருக்கு வழங்க முடியும். இந்த சாதனம் சீனாவின் ஷாப்பிங் தளமான Taobao மூலம் விற்பனைக்கு வருகின்றது. இதன் விலை 288 யுவான் ஆகும்.