வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்த பட்டியலில் சென்னை கடைசி இடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இருப்பினும் பெரும்பாலான மாவட்டங்களில் ஆதார் எண் இணைப்பில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி 38 லட்சத்து 66 ஆயிரத்து 626 வாக்காளர்கள் கொண்ட சென்னை மாவட்டத்தில் 31.83 சதவீத வாக்காளர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் ஆதார் எண் இணைப்பு குறித்த பட்டியலில் கடைசி இடமான 38வது இடத்தில் சென்னை உள்ளது என்றும் அரியலூர் மாவட்டம் 97.12% முதலிடத்தில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.