சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது குரங்குகளின் ஒரு அழகிய வீடியோவானது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், காருக்குள் இருந்து ஒரு குரங்கு வெளியில் வருவதை காண முடிகிறது. இது மிக அரிதான ஒரு வீடியோவாக இருக்கிறது. அதாவது, அந்த குரங்கு மனிதர்களை போல் உடையணிந்து காணப்படுகிறது. அந்த குரங்கு வெள்ளைகோட் அணிந்துள்ளது. இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.