
இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு பின் அதிகரிக்கும் இளம் வயது மாரடைப்பு பாதிப்பு குறித்து மருத்துவர்கள் ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர். உடல் செயல்பாடு குறைவு, மன அழுத்தம், போதை பொருட்கள் பயன்படுத்துதல், உணவு முறை மாற்றம் போன்றவற்றால் இளம் வயது மாரடைப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளது. தற்போது மாரடைப்பால் பாதிக்கப்படும் 10 பேரில் 8 பேர் தீவிரத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.