கேகேஆர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து அதைத் திறக்கச் சொன்னார்கள். அவர்கள் பெட்டியைத் திறந்ததும் உள்ளே இருந்து திடீரென ஒரு சிலந்தி (பொம்மை) வெளியே வரும்படி செட் செய்யப்பட்டிருந்தது.

இந்த பிராங்கில் கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் டிம் சவுதி ஆகியோரும் சிக்கினர். பெட்டியைத் திறந்ததும் அவர்கள் இருவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

சுவாரஸ்யமாக, வருண் சக்கரவர்த்தி மட்டும் அந்த சிலந்தியைப் பார்த்து துளியும் பயப்படாமல் மிகவும் அமைதியாக இருந்தார். அதேபோல், அணியின் மென்டார் டுவைன் பிராவோ அந்த பெட்டியைத் திறக்கவே இல்லை.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய கேகேஆர் அணி, நாளை (ஏப்ரல் 2) தனது சொந்த மண்ணான ஈடன் கார்டன்ஸில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது.

அந்தப் போட்டிக்கு முன்னதாக வீரர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக இந்த விளையாட்டுத்தனமான பிராங்க் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.