விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பிரதமர் கிசான் நிதி திட்டத்தின் 18வது தவணையை இன்று பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். இந்த தவணையின் கீழ், நாடு முழுவதும் உள்ள 9.4 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் தலா ரூ.2,000 பெறுகின்றனர், மொத்தமாக ரூ.20,000 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
விவசாயிகள் தங்கள் பயனாளி நிலையை சரிபார்த்து, பணம் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.