இண்டிகோ விமான சேவை நாடு முழுவதும் தொழில்நுட்பக் கோளாறால் திடீரென முடங்கியுள்ளது. இந்த கோளாறால் விமான நிலையங்களில் செக்-இன் செயல்பாடுகள் இயங்காமை ஏற்பட்டதால் பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இண்டிகோ நிறுவனம் X பக்கத்தில் வெளியிட்ட தகவலில், தொழில்நுட்பப் பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என்றும், சேவை முறையான நிலைக்கு திரும்பும் என்று உறுதிபடுத்தியுள்ளது. மேலும், பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது.