வடகொரியா ஒரு சர்வாதிகார ஆட்சி நாடாகும். இதன்  அதிபர் கிம் ஜாங் உன். வடகொரியாவின் மக்கள் மிகவும் கட்டுப்பாடுகளுடன் சர்வாதிகார ஆட்சியின் கீழ் நடத்தப்படுகின்றர். இந்நிலையில் தற்போது வடகொரியாவில் புதிய விதி ஒன்று நடைமுறையில் உள்ளது என கொரியப் பெண் ஒருவர் பாட்காஸ்டில் பதட்டமாக பேசியுள்ளார். வடகொரியாவில் இருந்து தப்பி ஓடி வந்த பெண்ணின் உரையாடலை வர்ணனையாளர் ஜோ. ரோகன் பேட்டி எடுத்துள்ளார். இந்த உரையாடலில், அனைவரது வீட்டிலும் அந்த நாட்டின் அதிபர் கிங் ஜாங் உன் புகைப்படம் கட்டாயமாக வைக்கப்பட வேண்டும். அந்த புகைப்படத்தை தூசி படாமல் வைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு தூசி, கரை ஏதேனும் இல்லாமல் பாதுகாக்கிறார்களா என்பதை சோதனை செய்ய அடிக்கடி இரவில் ஆய்வாளர்கள் வந்து சோதனை செய்வர். அவ்வாறு புகைப்படத்தை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டால் அது விசுவாசமின்மையை குறிக்கும். இதனால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் சிறையில் அடைக்கப்படலாம் மரண தண்டனை கூட விதிக்கப்படலாம். இல்லையெனில் மூன்று தலைமுறைக்கு ஆயுள் தண்டனையும் அளிக்கப்படும். ஒரு வீடு தீப்பிடித்தால் முதலில் கிம் ஜங் உன்னின் புகைப்படத்தை தான் முதலில் காப்பாற்ற வேண்டும். என்ற விதிமுறை உள்ளது என அந்தப் பெண் பேட்டி அளித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.