டைரக்டர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெப் தொடர் “அயலி”. 8 எபிசோடுகள் அடங்கிய இத்தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். மருத்துவராக வேண்டும் எனும் கனவோடு 8ம் வகுப்பில் கல்வி பயின்று வரும் தமிழ் செல்வி என்ற சிறுமி கிராம மக்களிடம் உள்ள கற்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களை தகர்த்தெறிந்து தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக போராடுகிறார்.

எனினும் வீரப்பன்னை கிராமத்தை சேர்ந்த இதர சிறுமிகளின் வாழ்க்கையில் ஒளி வீசச் செய்து ஒரு வழிகாட்டியாக திகழ்வதில் அவர் வெற்றி பெறுவாரா..? என்பதை மையமாக கொண்டு உருவாகியுள்ள இத்தொடர் வருகிற ஜனவரி 26 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தற்போது இதன் டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.