ரூபாய்.200 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் இருக்கிறார் சுகேஷ் சந்திரசேகர். இவர் இந்தி நடிகையான ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள், பணம் ஆகியவற்றை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜாக்குதலின் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஜாக்குலின் ஜாமீன் பெற்று உள்ளார்.

இந்நிலையில் காவல்துறையினரிடம் ஜாக்குலின் அளித்த வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் ஜாக்குலின் கூறியிருப்பதாவது, ”சுகேஷ் என் உணர்ச்சிகளோடு விளையாடி வாழ்க்கையையே நரகமாக்கி விட்டார். அவரை உள் துறை அமைச்சகத்தினுடைய முக்கிய அதிகாரி எனக் கூறி  என்னை நம்பவைத்தனர். தமிழக முன்னாள் முதல்வரின் உறவினர் என தெரிவித்தார். பல திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாகவும், அவற்றில் நான் நடிக்க வேண்டும் எனவும் கூறினார்.

தினசரி 3 முறை போன் மற்றும் வீடியோ காலில் பேசிக்கொள்வோம். ஆனால் அவர் சிறையிலிருந்து பேசுவதாக என்னிடம் ஒரு முறை கூட தெரிவிக்கவில்லை. ஒருக்கட்டத்தில் சுகேஷ் சிறையில் உள்ளதையும் என்னை அவர் ஏமாற்றியதையும் தெரிந்துகொண்டேன். ஆகவே சுகேஷ் என்னை முட்டாள் ஆக்கிவிட்டார். கடந்த 2021 ஆகஸ்டு 8-ஆம் தேதி கடைசியாக அவரிடம் பேசினேன்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.