தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் ஏகே 62 திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்படும் நிலையில், ஏகே 62 குறித்த அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அதன் பிறகு ஏகே 62 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமையை தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக பிரபல நடிகை சாய் பல்லவி நடிகை இருப்பதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே திரிஷா, காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், திஷா பதானி போன்ற நடிகைகளின் பெயர்கள் ஏகே 62 திரைப்படத்தில் அடிபட்ட நிலையில் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஆக சாய் பல்லவி தான் ஏகே 62 திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடிப்பதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. மேலும் நடிகை சாய் பல்லவி முதன் முறையாக அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.