செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உலக ஆசிரியர் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது, போற்றப்படுகின்றது.  ஆனால் நம்முடைய ஆசிரிய பெருமக்களுக்கு நேர்ந்திருக்கிற,  நிகழ்ந்து கொண்டிருக்கின்ற கொடுமையை நீங்கள் பார்க்கணும். நம்மளில் பெரும்பாலானோருக்கு இப்படி ஒரு போராட்டம் ஆசிரியர்கள் 12 நாட்களுக்கு மேலாக குழந்தைகளோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியே பெரிய அளவில் போய் சேரல.  ஆசிரியருக்கு ஒரு பிரச்சனை என்றால் ? ஆசிரியர் தான் போராடனும்.

மாணவர்களுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல. மாணவர்களுக்கு பிரச்சனைனா…  மாணவர்கள் தான் போராடனும். உழவர்களுக்கு உழவர்கள்  தான் போராடனும். மீனவர்களுக்கு மீனவர்கள் தான் போராட்டனும், செவிலியர்களுக்கு செவிலியர்கள் தான் போராடனும் என நினைக்கின்றது தான்  இங்க இருக்கிற ஆட்சியாளர்களுக்கு வசதியாக இருக்கிறது. ஆசிரியர் பிரச்சனை என்பது ரொம்ப அடிப்படை பிரச்சினை,  அடித்தட்டு. ஒரு நாட்டின் வளத்திலேயே ஆகச் சிறந்த வளம் அறிவு வளம் தான். அறிவில்லாதவன் கையில எது கிடைச்சாலும்,  அது பயனற்றது.

அதுக்கு சான்று இந்த ஆட்சி முறை. இது ஒன்னும் புதுசா இல்லையே….. நீங்க வச்ச கோரிக்கை தான். நீங்க சொன்ன வாக்குறுதி தான். தேர்தல் அறிக்கையில் 181, 311. நீங்க அறிவித்த அறிவிக்கை தான். நீங்க பேசுனது.. தான் மேடையில பேசுனது . அதைத்தான் நிறைவேற்றச் சொல்லி கேக்குறாங்க. இன்னைக்கு இல்லையே,  ஐயா கலைஞர்  கருணாநிதி அவர்கள் இருக்கும்போது, அம்மையார் ஜெயலலிதா இருக்கும்போது, ஐயா ஓபிஎஸ், ஐயா எடப்பாடி, இப்போது அய்யா ஸ்டாலின் அவர்கள் சொன்னது என தெரிவித்தார்.