செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீங்க என் மேல அக்கரைல கேக்குறீங்களா ? எப்படி எனக்கு புரியல ? உன் மேல வைக்கிற குற்றச்சாட்டு, விமர்சனம் உண்மையில்லன்னா…  நீ விளக்கம் சொல்லத் தேவை இல்லை என்கிறது தான்.  நீங்க நல்ல கேள்விகளைத் தான் கேட்கணும். இது குற்றச்சாட்டு என்று நம்பி இருந்தா..?  இத்தனை லட்சம் இளைஞர்கள் என்னை எப்படி பின் தொடர்வான்.

உங்களுக்கு புரியுதுல்ல. அவதூறுக்கு அஞ்சுபவன் அற்ப  வெற்றியை கூட தொட முடியாது. அது ஏன் தேர்தல் நேரத்துல  இது பேசப்படுது.. ஏன் பேசப்படுது ? 11 வருஷமாவா ஒரே குற்றச்சாட்டு.இப்ப நான் ஒரு கேள்வி கேட்கிறேன்…  ஒரு பொண்ணு என்னை ஏமாத்திட்டு போயிருச்சு.

அது ஒரு புருஷனோட வாழ்ந்துட்டு இருக்கு. நான் போய் சமூகத்துக்கிட்ட உங்ககிட்ட உட்கார்ந்துகிட்டு….  என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு ஒரு பொண்ணு ஏமாத்திட்டு போயிருச்சுன்னு நான் சொல்லிட்டே இருந்தேன்ன்னு வச்சிக்கோங்க..  காரி துப்பி  செருப்பை கழட்டி அடிக்க மாட்டீங்க..   அதை ஏன் நீங்க எல்லாரும் ரசிக்கிறீங்க ? ஊடகத்துல என தெரிவித்தார்.