பிரபல சுற்றுலா தலமாக கன்னியாகுமாரி திகழ்கின்றது. இங்கே விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். மேலும் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். இதில் குறிப்பாக கடலில் நடுவே இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டுவார்கள்.

இதனால் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகுகளை இயக்குகின்றது. சென்ற 2021 ஆம் வருடம் கொரோனா காரணமாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. பெரும்பாலான நாட்கள் தடை விதிக்கப்பட்டது. சென்ற வருடமும் கொரோனா தாக்கத்தினால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அதன்படி சென்ற வருடம் ஜனவரி 1ஆம் தேதி முதல் நேற்று வரை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 17 லட்சத்து 81 ஆயிரம் பேர் படகில் சென்று பார்வையிட்டுயிருக்கின்றார்கள்.