தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் விழுப்புரம்(தனி) தொகுதியில் பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சை என 31 பேர் வேப்புமனு தாக்கல் செய்தனர். நேற்று மனுக்கள் திரும்ப பெற பிற்பகல் 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்டோரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

அதன்படி ஏற்கனவே மனுத்தாக்கல் செய்திருந்த மக்கள் புரட்சி கழக வேட்பாளர் ராஜ்குமார் மட்டும் தனது மனுவை திரும்ப பெற்றார். இதனால் 17 பேர் போட்டியிடுவது உறுதியானது. இதனை தொடர்ந்து வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போதே விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது.