ஒடிசாவின் பிரம்மாபூர் ரயில் நிலையம் அருகே வந்த போது கன்னியாகுமரி விரைவு ரயிலில் புகை வந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்..

அசாமில் இருந்து கன்னியாகுமரிக்கு திப்ரூகர் – கன்னியாகுமரி விவேக் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒடிசாவின் பிரம்மாபூர் ரயில் நிலையம் அருகே வந்த போது கன்னியாகுமரி விரைவு ரயிலில் புகை வந்ததால் பயணிகள் அச்சமடைந்து ரயிலை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்.. ரயிலின் பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாக புகை வந்ததாக முதல் கட்டமாக தகவல் வெளியாகி உள்ளது

அதாவது, பிரேக் பகுதியில் ஒரு சாக்குப்பை (கோணி) சிக்கிக் கொண்டதாகவும், அதன் உராய்வு காரணமாக தான் இந்த  புகை உண்டானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பயணிகளுக்கு அந்த சமயத்தில் இது பற்றி தெரியாது. ரயிலில் புகை வந்ததால் பீதி அடைந்து பயணிகள் அச்சமடைந்து, ரயிலில் இருந்து இறங்கினர். இதற்கு காரணம் சமீபத்தில் தான் ஒடிசாவில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டது. அதுவே மக்களின் மனதில் இயற்கையாகவே ஒரு பயம் இருக்கிறது..

தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்கு அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகர் ரயில் செல்கிறது. ஒரிசா வழியாக செல்லும் போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கோணியை கண்ட உடனே தீயணைப்பு இயந்திரத்தை பயன்படுத்தி அதை அணைத்தனர். பிரேக் பகுதியில் ஒரு கோணி சிக்கிக்கொண்ட, அந்த ஒரு காரணமாகத்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அந்தக் கோணியை அகற்றி பிரச்சனை ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.. மீண்டும் ரயில் புறப்பட்டு உள்ளது .

இது ஒடிசாவில் உள்ள பிரம்மாபூர் ரயில் நிலையம் அருகே ரயில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் அந்த இடத்தில் நின்று தாமதம் ஏற்பட்டுள்ளது.. நல்ல வேலையாக புகை வந்தது தவிர வேறு நெருப்போ, அதனால் ஏதும் தீ விபத்து போன்ற பிரச்சனைகள் இல்லை. ஆகவே பயணிகள் தற்போது பெருமூச்சுடன் தங்கள் பயணத்தை தொடர்ந்துள்ளனர்
புகை வந்தவுடன் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு தீ பிடிக்காமல் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்..

https://twitter.com/ANI/status/1678717643313000448