தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் வரும் நிலையில் அந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பலர் வில்லனாக நடிப்பதால் யார் மெயின் வில்லன் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் நடிகர் கமல்ஹாசனை கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டும் என அனுகியுள்ளாராம். ஆனால் அதற்கு கமல்ஹாசன் ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம்.

அதாவது லியோ படத்தில் தான் கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டும் என்றால் விக்ரம் 2 படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம். இதற்கு நடிகர் விஜய் தற்போது சம்மதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எப்படியாவது விஜயை சம்மதித்து வைக்க வேண்டும் என்று லோகேஷ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கைதி படத்தின் தொடர்ச்சி தான் விக்ரம். இதனால் லியோ படம் விக்ரம் மற்றும் கைதி படங்களின் தொடக்கமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் லியோ படமும் லோகேஷின் LUC-வில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.