தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வெப் தொடரின் வாயிலாக நடிகையாக அறிமுகமானவர் அபிராமி. இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார் அபிராமி. இந்த நிகழ்ச்சியை அடுத்து நோட்டா, காற்று வெளியிடை, விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

மேலும் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்ததன் வாயிலாக அபிராமி மிகவும் ஹிட் ஆனார். இந்த நிலையில் திடீரென்று மஞ்சள் தாலியுடன் திருமணமானது போல் புகைப்படம் வெளியிட்டுள்ளார் அபிராமி. இதை பார்த்த ரசிகர்கள் திருமணம் முடிந்துவிட்டதா?, யாருக்கு சொல்லவே இல்லையே என கமெண்ட் செய்கின்றனர். அதே நேரம் சிலர் இது படப்பிடிப்பிற்காக அவர் எடுத்த போட்டோவாக இருக்கும் என சொல்கின்றனர்.