கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்தது குறித்து ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி சிபிசிஐடி காவல்துறையினர் விசாணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீமதியின் மொபைல் போனை சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமனற்றமானது மாணவியின் பெற்றோருக்கு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி ஸ்ரீமதியின் மொபைல்போனை ஒப்படைப்பதற்காக விழுப்புரம் நீதிமன்றத்திற்கு அவரது தாயார் செல்வி இன்று வந்தார். இந்நிலையில் மொபைல்போனை தாம் பெற்றுக்கொள்ள இயலாது. சிபிசிஐடி விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கும்படி தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி தெரிவித்தார். அதன்படி சிபிசிஐடி அலுவலகத்தில் ஸ்ரீமதியின் மொபைல்போனை மாணவியின் தாயார் ஒப்படைத்துவிட்டு சென்றார்.