கடலூர் மாவட்டத்தில் பாஜக கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது ஒரு சரித்திர வெற்றி. தொடர்ந்து 27 வருடங்களாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ஆம் ஆத்மி கட்சி 128 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.

பிரதமர் மோடி மேல் மக்கள் வைத்த நம்பிக்கை தான் இந்த வெற்றிக்கு காரணம். பட்டியலின மக்கள் வசிக்கும் 40 தொகுதிகளில் 38 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு பூத் கமிட்டியை வலுப்படுத்தும் பணிகளில் கட்சியினர் ஈடுபட வேண்டும். அதோடு திருச்செந்தூரில் ஏப்ரல் 14-ஆம் தேதி நடை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து 9 தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அவை பின்வருமாறு,

பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி நட்டா தொடர வாழ்த்துக்கள்.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 8-வது இடத்திற்கு சென்றுள்ளதற்கு திமுக அரசுக்கு கண்டனங்கள்

தமிழக விவசாயிகளையும் நெசவாளர்களையும் வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனங்கள்.

பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கிய திமுகவுக்கு கண்டனங்கள்

காசி தமிழ் சங்கத்தை உருவாக்கிய பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்

புதுக்கோட்டை வேங்கை வயலில் பட்டியலின மக்களுக்கு நடந்த அநீதிக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்.

ராமர் பாலத்திற்கு சேதம் இல்லாத அளவுக்கு சேது சமுத்திரத் திட்டம் அமைய வேண்டும்

சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக நடந்த அராஜகத்திற்கு கண்டனங்கள்

ஜி20 மாநாட்டிற்கு தலைமை பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் மோடிக்கு பாராட்டுகள்

மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியல் நடைபெறும் இடைத்தேர்தல் குறித்தும் செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.