இங்கிலாந்து நாட்டில் இயன் ஸ்பரோட் என்ற 41 வயதான நபர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானார். இதிலிருந்து வெளிவருவதற்காக அவர் தன்னை ஒரு புகைப்பட கலைஞராக மாற்றிக் கொண்டார். இதனை அடுத்து அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று கண்ணில் பட்ட இயற்கை காட்சிகளை புகைப்படமாக எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் அந்நாட்டில் சதர்லாந்து பகுதியில் இருக்கும் கடற்கரைக்கு சென்றார்.

https://www.instagram.com/p/CpK5PB9IUT3/?utm_source=ig_embed&ig_rid=285ab19a-f81e-4885-92f1-77b6a1a26954

அங்கு அவர் 12 மணி நேரமாக தொடர்ந்து புகைப்படங்களை எடுத்துள்ளார். அதன் பின்பு அவர் தான் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் புகைப்படங்களில் ஒன்றில் கடல் அலை கலங்கரை விளக்கத்தில் மோதி மனித முகம் போன்ற உருவத்தில் தண்ணீர் சிதறியுள்ளது. இதனைக் கண்ட அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். இதனை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை இணையதள வாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.