உலகின் ஏடிஎம் மையமாக அமெரிக்கா இருக்காது என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள நிக்கி ஹாலே கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே போட்டியிட உள்ளார். இந்நிலையில் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர் உலகின் ஏடிஎம் மையமாக அமெரிக்கா இருக்காது என கூறினார்.

ஆட்சி அதிகாரத்திற்கு தான் வந்தால் அமெரிக்காவை வெறுக்க கூடிய நாடுகளுக்கு வெளிநாட்டு நிதியுதவி வழங்க கூறிய தொகையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். வலிமையான அமெரிக்கா மோசம் வாய்ந்தவர்களுக்கு செலவு செய்யாது எனவும் தெரிவித்தார். மக்கள் கஷ்டப்பட்டு ஈட்டும் வருவாயை மோசம் வாய்ந்த நபருக்கு அமெரிக்கா வீணாக செலவிடாது எனவும் கருத்து தெரிவித்தார்.