குடியரசுத் தலைவர் தமிழ்நாடு வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால், சென்னை கிண்டியில் வருகிற 5-ஆம் தேதி கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் குடியரசு தலைவரை வைத்து வேறு தேதியில் மருத்துவமனை திறக்கலாமா (அல்லது) வேறு தலைவரை அழைக்கலாமா என ஆலோசனை நடத்தப்படுகிறது.
