வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்தது. இது இன்று தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவ கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் காரைக்கால், நாகை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.