நாட்டின் தலைநகர் டெல்லியின் தெற்குப் பகுதியான மெஹ்ராலியில், இன்று காலை உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரி ஒன்றின் டயர் திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

அந்த வழியாகப் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 11 வயது சிறுமி, எதிர்பாராத விதமாக லாரிக்கு அருகில் சிக்கிக் கொண்டார். அந்த லாரியின் டயர் ஒரு கடையின் வாசலில் படிக்கட்டாக வைக்கப்பட்டிருந்த இரும்பு கிரில் (Iron Grill) மீது ஏறியதால், அழுத்தம் தாங்காமல் டயர் வெடித்ததாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

டயர் வெடித்த வேகத்தில் அந்த சிறுமி லாரிக்கு அருகே சிறிது நேரம் சிக்கிக் கொண்டாலும், அதிர்ஷ்டவசமாக அவருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.

வெடிச்சத்தம் கேட்டு ஓடி வந்த அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டனர். இந்தத் திடீர் விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மெஹ்ராலி போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.