ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள BhIM-UPI பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்காக 2600 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் மற்றும் யுபிஐ பேமென்ட்கள் மூலம் செய்யப்படும் இகாமர்ஸ் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக வங்கிகளுக்கு நிதி சலுகைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.