கிரீஸ் நாட்டில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். டெம்பி நகர் அருகே எவங்கெலிஸ்மோஸ் பகுதியில் 350 பயணிகளுடன் சென்ற ரயிலும், சரக்கு ரயிலும் மோதிக்கொண்டதில் படுகாயமடைந்த 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.