2022-23 நிதியாண்டில் ரூ.3.69 லட்சம் சொத்து வரி செலுத்தாமல் ரோஹினி திரையரங்க நிர்வாகம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மாநகராட்சி 10,000 ரூபாய் அபராதமும் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த காலங்களில் நிலுவையில் உள்ள 24 லட்சம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.