தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது கொரடாலா சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த சிம்ஹாத்ரி திரைப்படம் ரீரிலிஸ் செய்யப்பட்டது.

இதை கொண்டாடும் விதமாக விஜயவாடாவில் உள்ள ஒரு திரையரங்கில் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது இருக்கைகள் தீப்பற்றி எரிந்ததால் தீ விபத்து ஏற்பட்டது. உடனே அங்கிருந்து ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.