இந்தியாவில் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக அடிக்கடி பல்வேறு விதமான சிறப்பு சந்தா திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது அதன் பிரீமியம் சந்தா குறித்த அறிவிப்பை ஜியோ சினிமா வெளியிட்டுள்ளது. இந்த புதிய சந்தாவின் மூலம் ஹாலிவுட் நிகழ்ச்சிகளை பார்க்கலாம். அதாவது disney+ hotstar நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்த HBO நிறுவனம் சமீபத்தில் அதிலிருந்து விலகியது. அதன்பிறகு ஜியோ நிறுவனத்துடன் அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்ததால் இனி ஜியோ பிரிமியம் சந்தா திட்டத்தின் மூலம் ஹாலிவுட் நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.

இந்த திட்டத்தை நேரடியாக பெறுவதற்கு ஜியோ சினிமா வெப்சைட்டில் சென்று வருடத்திற்கு 999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு ஜியோ சினிமாவின் ஐடியை பகிரலாம்‌. இதன் மூலம் ஒரே நேரத்தில் ஜியோ சினிமா ஆப்பில் வீடியோக்களை பார்த்து மகிழ முடியும். மேலும் இதே போல் மாத சந்தா செலுத்தி பயன்படுத்தும் திட்டங்களையும் விரைவில் ஜியோ அறிவிக்க இருக்கிறது.