
Jio, Airtel ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தன் வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் பிளானில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளத்திற்கு இலவச சந்தாவை வழங்குகிறது. இதில் Airtel தன் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய்.1499 மதிப்புள்ள போஸ்ட்பெய்டு திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 200gp டேட்டா வழங்கப்படுகிறது.
அதோடு இதில் நீங்கள் தினசரி 100 sms வரை இலவசமாக செய்துக்கொள்ளலாம். மேலும் இவற்றில் அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இது தவிர்த்து இந்த போஸ்ட்பெய்டு திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்றவற்றுக்கான இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது.
இதையடுத்து Jio தன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.799 மதிப்புள்ள போஸ்ட்பெய்டு திட்டத்தை வழங்குகிறது. இத்திட்டத்தை பெறுவதன் வாயிலாக உங்களுக்கு 150gp டேட்டா கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் கூடுதலாக 2 நபர்களை சேர்க்கலாம். இது உங்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. அதோடு இது உங்களுக்கு அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் நெட்ப்ளிக்ஸ் போன்றவற்றுக்கான ஒரு வருட இலவச சந்தாவை வழங்குகிறது.