உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  வாட்சாப் மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக ஆப்பிள் போன்களில் வாட்சாப் பயன்படுத்தும் பீட்டா பயனர்களுக்கு இந்த வசதி அறிமுகமாகியுள்ளது. இது படிப்படியாக அனைத்து போன்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக எழுந்துவரும் எடிட் வசதியை வாட்சாப் ஒருவழியாக அமல்படுத்திவிட்டதால் பயனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.