தேசிய தேர்வு முகமை நேற்று இரவு JEE முதன்மை இறுதி விடை குறிப்பை வெளியிட்டுள்ளது. B.Tech இடங்களுக்கான தாள்-1 தேர்வு கடந்த ஆறாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்பு முதன்மை விடை குறிப்பை வெளியிட்ட என் டி ஏ அதன் மீது விண்ணப்பதாரர்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றது. இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இறுதி விடை குறிப்பு வெளியிடப்பட்டது. இதனை தேர்வர்கள் jeemain.nta.nic.in  என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் முதன்மை அமர்வு இரண்டு தேர்வுகளில் சுமார் 9.4 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது.