தீபாவளி பண்டிகை என்று ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் விதவிதமான பலகாரங்களை செய்து சாப்பிடுவார்கள். இந்த பதிவில் சுவையான ஜாங்கிரி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

உளுந்து-1 கப்
சர்க்கரை-3 கப்
ஏலக்காய் தூள்-சிட்டிகை
ஃபுட் கலர்-1 சிட்டிகை
அரிசி மாவு-1 ஸ்பூன்
எண்ணெய்-தேவையான அளவு

முதலில் ஒரு அகண்ட பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி எசென்ஸ் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு தயாரிக்க வேண்டும். முன்னதாக ஒரு மணி நேரம் உளுந்தை நன்கு ஊற வைத்து நீர் தெளிக்காமல் அரைத்து எடுக்க வேண்டும். இதனையடுத்து தண்ணீரில் கையை நனைத்து கொண்டு மாவு நன்கு கெட்டியாகும் வரை அரைக்க வேண்டும். அந்த மாவுடன் ஃபுட் கலர், அரிசி மாவு சேர்த்து பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் வெள்ளை துணி அல்லது கெட்டியான பாலத்தின் கவரில் ஒரு சிறிய ஓட்டை போட்டு அதில் மாவு கலவையை போட்டு பிசைந்து எடுக்க வேண்டும். இதனையடுத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் குறைந்த தீயில் வைத்து மாவை முதலில் வட்டமாகவும் அதன் பிறகு சிறு சிறு வட்டங்களாகவும் பிழிந்து விட வேண்டும். எண்ணெய் சூடாக இருக்க கூடாது. இரு பக்கமும் வெந்ததும் அதனை எடுத்து சர்க்கரை பாகில் போட்டு ஊற வைக்க வேண்டும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறினால் சுவையான ஜாங்கிரி ரெடி.