தீபாவளி என்றாலே பலகாரம், புத்தாடை, பட்டாசு தான் ஞாபகம் வரும். தீபாவளிக்கு விதவிதமான பலகாரங்களை வீட்டில் செய்து சாமி கும்பிட்டு சாப்பிடுவார்கள். இந்த தீபாவளி ஸ்பெஷல் ஆக சுவையான சுசியம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு-ஒரு கப்
வெல்லம்-3/4 கப்
துருவிய தேங்காய்-1/4 கப்
சுக்கு பொடி-1/2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள்-1/2 தேக்கரண்டி
மைதா மாவு-3/4 கப்
தண்ணீர்-தேவையான அளவு
எண்ணெய்-பொரிக்க தேவையான அளவு

முதலில் கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். இதனையடுத்து சூடான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு தேங்காய் துருவலை மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.அதே பாத்திரத்தில் பொடியாக்கிய வெல்லத்தை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வெள்ளம் உருகி கரையும் வரை கிளறி பாகு பதம் வந்தவுடன் வேக வைத்த கடலை பருப்பு, தேங்காய் துருவலை அதில் சேர்த்து கலக்க வேண்டும்.

இதனையடுத்து சுக்கு பொடி, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி பூரணம் நன்கு உருண்டு வரும் பதத்தில் இறக்கி விட வேண்டும். அதன் பிறகு மைதா மாவில் சிறிது உப்பு தண்ணீர் சேர்த்து மாவாக கலந்து எடுக்க வேண்டும். பின்னர் பூரணத்தை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மைதா மாவு கலவையில் இட்டு பிரட்ட வேண்டும். அதனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான சுசியம் ரெடி.