
மாநில அரசால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதா நிலுவையில் இருப்பது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிஅண்மையில் பேசியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இவரது கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதாவது, பாஜக நியமிக்கும் ஆளுநர்கள் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கின்றனர் என ப.சிதம்பரம் விமர்சித்திருக்கிறார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் விசித்திர விளக்கத்தை அளித்திருக்கிறார். முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை குழு ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினாலும் இரண்டாவது முறை நிறைவேற்றும்போது ஒப்புதல் தந்தே ஆகவேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.