
நாட்டின் 74வது குடியரசு தினம் சென்ற 26-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் மராட்டியத்திலுள்ள பள்ளி சிறுவன் ஜனநாயகம் பற்றி பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் சிறுவன், உண்மையில் இன்று தான் ஜனநாயக தினம். இந்நாளில் இருந்தே நாட்டில் ஜனநாயகம் துவங்கியது.
அதை நான் நேசிக்கிறேன். ஜனநாயகத்தில் தாங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். அதாவது, சண்டை போடலாம், நண்பர்களாக இருக்கலாம், காதல் செய்யலாம். ஆனால் சிறு சிறு தவறுகளை செய்வதிலும், பிராங்க் விளையாடுவதிலும், வனத்தில் நடந்து செல்வதும், குரங்குபோல் மரத்தில் ஏறுவதும் எனக்கு விருப்பம் ஆகும். இதற்காக எனது தந்தை என்னை அடிக்கமாட்டார். ஏனென்றால் ஜனநாயகத்தில் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது.
சில நேரங்களில் ஆசிரியர் என்னை உக்கிபோட சொல்கிறார். என் அணுகுமுறை ஜனநாயக முறையில் இல்லை என கூறுவார். தனக்கு எதிராக அவருக்கு நிறைய புகார்கள் வரும். உண்மையை கூறுவதெனில், என்னை போன்ற எளிமையான மற்றும் ஏழ்மையான சிறுவன் இந்த ஒட்டுமொத்த தாலுகாவிலேயே இல்லை. மேலும் என் விலைமதிப்பற்ற எண்ணங்களை நான் நிறுத்திகொள்கிறேன். வாழ்க ஜனநாயகம்!.. என சிறுவன் பேசி இருக்கிறான். இதை கேட்டு கொண்டிருந்தவர்கள் தாங்க முடியாமல் சிரிக்கும் காட்சிகளும் வீடியோவில் காணப்படுகிறது.
सत्यवचन 😂 pic.twitter.com/ZfyPoccLkg
— Dr prashant bhamare (@dr_prashantsb) January 28, 2023