தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன் வரிசையில் தற்போது தமிழ்நாட்டிலிருந்து பா.ஜ.க மூத்த நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணனும் ஆளுநர் பதவியை அலங்கரிக்க இருக்கிறார்.

மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட 12 மாநிலங்களில் ஆளுநர்களையும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கான புது துணைநிலை ஆளுநரையும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று நியமனம் செய்தார். மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்நியமனத்தில், மகாராஷ்டிர ஆளுநராக இருந்த பகத்சிங் கோஷயாரி, லடாக் துணைநிலை ஆளுநர் ஆர்.கே. மாத்தூர் போன்றோரின் ராஜினாமைவை குடியரசு தலைவர் ஏற்றார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்பாக பகத்சிங் கோயஷாரி தான் ஆளுநர் பதவியிலிருந்து விலக விரும்புவதாக பிரதமர் மோடியிடம் கடந்த மாதம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழ்நாடு பா.ஜ.க-வின் மூத்தநிர்வாகியும், முன்னாள் மாநில தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த இல.கணேசன் இப்போது நாகலாந்துக்கு மாற்றப்பட்டு உள்ளார். இவர் கூடுதலாக மேற்கு வங்கத்தின் ஆளுநராகவும்(பொறுப்பு) இருக்கிறார். அதேபோல் ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ்பயஸ், மகாராஷ்டிரா ஆளுநராக மாற்றப்பட்டு உள்ளார்.