இந்தியா குறித்து உலகெங்கிலும் பேசப்படும் முக்கியமான அம்சம், இங்குள்ள மக்களின் அன்பும், வரவேற்பும் தான். பல வெளிநாட்டு யூடியூபர்கள் இந்தியாவிற்கு வரும்போது, இங்கு அவர்களுக்கு கிடைக்கும் மனதளவான உதவி மற்றும் மனிதநேயத்தால் ஆச்சரியப்படுகிறார்கள். அந்த வகையில், யூடியூபர் நிக் என்ற வெளிநாட்டு பயணியின் சமீபத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Nick McCutcheon | Traveler – Vlogger – Storyteller (@nicks.roadtrip)

இந்த வீடியோவில், நிக் பெங்களூருவில் வசிக்கும் மாற்றுத் திறனாளியான ஒரு ஆட்டோ டிரைவர் சாஷி என்பவரை சந்திக்கிறார். சாஷி உடலில் குறைபாடு இருந்தாலும், அதை தாண்டி தன்னம்பிக்கையுடன் தனது ஆட்டோவை ஓட்டி, குடும்பத்தை பொறுப்புடன் கவனித்து வருகிறார். “நான் உலகம் முழுவதும் பயணம் செய்கிறேன். இந்த மனிதர் உலகத்திற்கு உத்வேகம் அளிக்கிறார். வாழ்க்கையில் நல்லது பெற கடின உழைப்பு தேவை. இப்படி உழைக்கும் இந்தியரை நான் பார்த்தது இல்ல,” என்று நிக் தனது பதிவில் கூறியுள்ளார்.

சாஷியின் ஊக்கமும், உறுதியும் நிக்கிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. “நீங்கள் மிகுந்த வலிமை கொண்டவர், மேலும் பலம் பெற்று வாழ்வீர்கள்” என்ற வார்த்தைகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. தனது இயலாமையை தாண்டி, உற்சாகமாக தனது பணியைச் செய்கிற சாஷியின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு முன்மாதிரி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது மற்றும் பலரது இதயங்களை தொட்டுள்ளது.