மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மிகப்பெரிய ராட்சத ராட்டினங்கள் அமைக்கப்பட்டு இருப்பது வழக்கம். அதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் ஏறி சவாரி செய்வர். அதேபோன்று சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் ராட்சதராட்டினத்தில் ஏறிய சிறுமி எதிர்பாராத விதமாக ராட்டினத்தில் தொங்கிய நிலையில் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பூங்காவில் வேடிக்கை நிறைந்த சாகச சவாரிகள் இருந்துள்ளன. அதில் மிகப்பெரிய ராட்சத ராட்டின சக்கரத்தில் சிறுமி ஒருவர் சவாரி செய்யும் போது ராட்டினம் பாதி அளவு மேலே சென்றபோது திடீரென சமநிலை தவறி அவர் அமர்ந்திருந்த கேபினில் இருந்து வெளியே விழுவது போல் வந்துள்ளார்.
बलौदाबाजार, छत्तीसगढ़
भाटापारा के पार्क में आकाश झूला पर बड़ा हादसा टला
झूला झूलते समय एक महिला बाहर लटक गई, मौके पर मौजूद कर्मचारियों की सूझबूझ से बची जान
कड़ी मशक्कत के बाद महिला को सुरक्षित नीचे उतारा गया #Chhattisgarh pic.twitter.com/mlk1wyVJBk
— Gaurav Kumar (@gaurav1307kumar) August 10, 2025
ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த சிறுமி அருகில் இருந்த எதையோ ஒரு கம்பியை பிடித்து ராட்டினத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனை பூங்காவில் நின்ற அனைவரும் கத்தி கூச்சலிட்டு ராட்டினத்தின் ஊழியர்களிடம் தெரிவித்தனர். அப்போது அடையாளம் தெரியாத ராட்டின சக்கரத்தின் ஊழியர் ஒருவர் துணிச்சலாக ராட்டினத்தின் மேலே ஏறி சிறுமியை பாதுகாப்பாக மீட்டார்.
இதனை பூங்காவில் நின்ற பொதுமக்கள் அனைவரும் வீடியோ எடுத்துள்ளனர். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அந்த இளைஞரின் துணிச்சலை பாராட்டி பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இருப்பினும் சிலர் இதுபோன்ற வேடிக்கை ராட்டினங்களில் சவாரி செய்யும்போது பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்பதையும் வலியுறுத்தி வருகின்றனர்.
