காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், வயநாடு எம்.பியுமான பிரியங்கா காந்தியை கடந்த மூன்று மாதங்களாக காணவில்லை என பாஜக பட்டியலின தலைவர் முகுந்தன் பள்ளி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் புகாரியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வயநாடு பழங்குடி இன மக்கள் அதிகம் உள்ள தொகுதி. அங்கு சமீப காலங்களில் நூற்றுக்கணக்கான உயிர்கள் மிகப் பெரிய பேரழிவில் கொல்லப்பட்டனர்.
மேலும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பல பகுதிகள் பெரும் பாதிப்படைந்து உள்ளது. ஆனால் அவர்கள் எதிர் கொள்ளும் எந்த ஒரு பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் வயநாடு எம்.பி இருப்பு இல்லை. இத்தகைய சூழலில் கடந்த 3 மாதங்களாக அவர் காணாமல் போய் உள்ளார்.
எனவே எனது புகாரை ஏற்று காணாமல் போன எம்.பி பிரியங்கா காந்தியை கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று திருச்சூரிலும் மத்திய மந்திரி சுரேஷ் கோபியை காணவில்லை என காங்கிரஸ் மாணவர் அமைப்பு புகார் கொடுத்தது.
அந்தப் புகாரிலும் கடந்த 2 மாதங்களாக திருச்சூரில் நடைபெறும் எந்த நிகழ்வுகளிலும் தொகுதி எம்.எல்.ஏவை காணவில்லை எனவும் மேயர் முதல் வருவாய் அமைச்சர் வரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், சுரேஷ்கோபி நான் அலுவலகத்தில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் எங்கே இருக்கிறார்? என்பதை கூட யாரும் எந்த தகவலும் கொடுக்கவில்லை என புகார் அளித்துள்ளனர்.
