சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகும் சில காணொளிகள் மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளியில் நபர் ஒருவர் தனது அபாரமான கைவண்ணத்தால் வெறும் 52 அங்குல நிலப்பரப்பில் 2 அடுக்கு மாடி வீட்டைக் கட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.
View this post on Instagram
இந்த வீட்டைக் கட்டும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது வீணாகப் பணத்தை விரயம் செய்வதாகக் கூறிப் பலரும் அவரை விமர்சித்துள்ளனர். ஆனால் தனது சுய புத்தியையும் விடாமுயற்சியையும் முதலீடாகக் கொண்டு அவர் இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்தக் காணொளியை லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்துள்ளதோடு அந்த நபரின் திறமையையும் தற்பெருமையுடன் அருகில் நிற்கும் அவரது மனைவியின் மகிழ்ச்சியையும் பாராட்டிப் பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
