
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிறுபான்மை மக்களிடம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனும், பாலும் ஆறாக ஓடும். சிறுபான்மை மக்கள் பெரிய அளவில், எல்லா வகையிலும் ஏற்றம் பெறுவார்கள் என்றார்கள். எங்கே ஏற்றம் பெற்றார்கள். இன்றைக்கு பார்த்தால் சிறுபான்மை மக்கள் அத்தனை பேரும் கொதித்து போயிருக்கிறார்கள்.
இன்றைக்கு மக்களுக்கு தெரிகிறது… சிறுபான்மை மக்களுடைய ஒரு முழுமையான அளவிற்கு DMK விரோதத்தை பெற்று மனக்குமுறளோடு சிறுபான்மை மக்கள் இருந்து கொண்டிருக்கின்றன நிலையில், அதை எல்லாம் பூசி மொழுக வேண்டும் என்பதற்காக ( அதிமுகவுக்கு தீடிர் பாசம் ) இப்படி பேசுகிறார் ஸ்டாலின்.
உண்மையாலும் பார்க்கப் போனால் சிறுபான்மை மக்களுக்கு… புரட்சித்தலைவர் காலத்திலும் சரி…அதே போல் புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் சரி….அதே போல் அண்ணன் எடப்பாடி காலத்திலும் சரி….முழுமையான பாதுகாப்பு வழங்கிய ஒரு அரசு நம்முடைய அம்மா அரசு, எடப்பாடி அரசு. எந்த பாதிப்பாவது இருந்ததா ? கிடையாது. டிசம்பர் 6 என்று வந்து விட்டால் திமுக ஆட்சி காலத்தில் நெருப்பை மடியில் கட்டிக்கிட்டு போற மாதிரி போகணும்… ஆட்டோவில் போனால் சகோதரிகளை பார்ப்பார்கள் என தெரிவித்தார்.