தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கும்,  அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. மேலும் தண்டனையை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது. இந்தத் தீர்ப்பின் காரணமாக திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை எம்எல்ஏ பொன்முடி இழந்துள்ளதாக சட்டப்பேரவை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது.  ஊழலின் சாம்ராஜ்யம் பல வழக்குகள் என்னும் போது இன்னைக்கு எல்லாமே குழம்பிட்டு இருக்கிறதுதான்.  இப்போ உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு கொடுத்துள்ளது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் இன்னைக்கு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.  திமுகவை பொறுத்தவரை இது ஜெயில் காலம் என்று சொல்லலாம்.ஜெயிலுக்கு ஒன் பை ஒன் ஆக போய்கிட்டு இருப்பாங்க. ஒரு விக்கெட் விழுந்து இருக்கு. அடுத்த விக்கெட் விழும்.  கடைசியில் எல்லாம் கோபாலபுரம் வரை வந்து நிற்கும் என தெரிவித்தார்.