
புகைப்பழக்கம் மிகவும் கொடியது. இதனால் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருப்பதற்கு பல்வேறு அமைப்புகளால் பல்வேறு விழிப்புணர்வு பேரணி, பிரச்சாரம் என தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் வசித்து வரும் நபன் குப்தா என்ற இளைஞர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி செய்து பொம்மைகளாக தயாரித்து வருகிறார். இதுகுறித்து நபன் குப்தா வீடியோ ஒன்றையும் இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ 60 வினாடிகள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. இந்த வீடியோ கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த வீடியோவில், பல லட்சக்கணக்கான சிகரெட் துண்டுகளை தனித்தனியாக பிரித்தெடுத்து அதிலுள்ள பஞ்சுகளை மறுசுழற்சி செய்கிறார்கள். இந்த மறுசுழற்சி முறையை குஃப்தா தெளிவாக விளக்குகிறார். மறுசுழற்சி செய்யப்பட்ட சிகரெட் பஞ்சுகளை அழகழகான வண்ணங்களில் உள்ள பொம்மைகளுக்குள் அடைத்து பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன.
View this post on Instagram