இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில் ஒரு சிறுவன் ஆபத்தான முறையில் ஒரு வேனின் பின்னால் நின்றபடி செல்கிறார். இதனை பார்த்த மற்றொரு வாகனத்தில் இருந்த நபர்கள் அந்த வேனை  பின்தொடர்ந்து ஹாரன் அடித்தபடி செல்கிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Mia (@fanny_vidio0)

தொடர்ந்து ஹாரன் அடித்ததால் வேனை நிறுத்திய நபர் கீழே இறங்கி வருகிறார். அப்போது பின்னால் நின்று கொண்டிருந்த அவரது மகனை ஒருவர் பிடித்து கீழே இறக்குகிறார். இதனை பார்த்த தந்தை அதிர்ச்சியில் உள்ளார். அதன் பின் அவர் தனது வாகனத்தில் மகனை அழைத்துச் செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில், தந்தை மகனை அழைத்துச் செல்லவில்லை, ஆனால் மகன் தந்தைக்குத் தெரியாமல் வாகனத்தின் பின்னால் செல்கிறார் என்ற தலைப்புடன் இடம்பெற்றுள்ளது. இதற்கு பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.